இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 70.66 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இதில் இறுதி 10 கோடி தடுப்பூசிகள் மாத்திரம் 13 நாட்களில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 70 கோடி தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்தியா முதல் 10 கோடி தடுப்பூசிகளை செலுத்த 85 நாட்கள் எடுத்துகொள்ளப்பட்டது. அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்தில் இதுவரை 8.24 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 3.60 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு 9 ஆம் இடத்தில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.