விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இதன்படி தற்போது பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இப்போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.
முதலாவது பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், பிரித்தானியாவின் எம்மா ரடுக்கானுவும் கிரேக்கத்தின் மரியா சக்கரியும் பலப்பரீட்சை நடத்தினர்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் எம்மா ரடுக்கானு வெற்றிபெற்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இரண்டாவது பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், கனடாவின் லேலா அன்னி பெர்னாண்டசும், பெலராஸின் ஆரினா சபாலெங்காவும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 7-6, 4-6, 6-4 என்ற செட் கணக்குகளில் லேலா அன்னி பெர்னாண்டஸ் வெற்றிபெற்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.
எவ்வாறாயினும் இம்முறை அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் இளம் வீராங்கனையொருவர் சம்பியன் கிண்ணம் ஏந்தவுள்ளமை உறுதி.