பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் அனைத்து துறையிலும் தொடர்ந்து நெருக்கமான ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.
காணொளி காட்சி மூலம் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற, 13ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நாம் இன்று செய்யும் வேலைகள் கணிசமானதகவும், பலனளிக்கும் வகையில் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் அனைத்து துறையிலும் தொடர்ந்து நெருக்கமான ஒத்துழைப்பு வழங்க ரஷ்யா தயாராக உள்ளது என்பதை நான் மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்’ என கூறினார்.
பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் இணைந்து ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பை உருவாக்கி உள்ளது.
இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு, ‘தொடர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமித்த கருத்துக்கான பிரிக்ஸ் உள் ஒத்துழைப்பு’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நடைபெற்றது.