நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே ஆபத்து இல்லாமல் மீண்டும் நாட்டை திறக்க முடியும் என நம்புவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
தற்போதைய ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு நீக்க தீர்மானிக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.