கடந்த மாதம் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து காபூலில் இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட முதல் ஆப்கானிஸ்தான் அகதிகள் குழு, வேல்ஸுக்கு வந்துள்ளனர்.
வேல்ஸ் முழுவதும் கிட்டத்தட்ட 50 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதாக வேல்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மொத்தமாக 230 ஆப்கானியர்கள் வேல்ஸில் மீள்குடியேற்றம் செய்யப்படுவதால், உர்த் இளைஞர் அமைப்பு தங்குமிடத்தை வழங்க உதவுகிறது.
தலிபான்கள் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியபின், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20,000 ஆப்கானியர்களை மீண்டும் குடியேற்றுவதாக பிரித்தானிய அரசாங்கம், உறுதியளித்த பிறகு இது நிகழ்கிறது.
இதுகுறித்து வேல்ஸின் சமூக நீதி அமைச்சர் ஜேன் ஹட் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானில் நம் நாட்டிற்கு சேவை செய்த குடும்பங்கள் மற்றும் தனிநபர்களை இன்று வரவேற்கிறோம்.
வேல்ஸ் புகழிட தேசம் என்ற எங்கள் உறுதிமொழியை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். ஆப்கானிய மொழி பெயர்ப்பாளர்கள், அகதிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் வரவேற்கப்படுவதை உறுதி செய்ய முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்’ என கூறினார்.