ஏழாவது ரி-20 உலகக்கிண்ண தொடரில் விளையாடும் மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒய்ன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில், மொயின் அலி, ஜோனி பேர்ஸ்டோ, சேம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சேம் கர்ரன், கிறிஸ் ஜோர்தான், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், டைமல் மில்ஸ், அடில் ரஷீத், ஜேஸன் ரோய், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்கா அணியில், கேசவ் மஹராஜ், குயின்டன் டி கொக், ஜோர்ன் ஃபோர்டுயின், ரீஸா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், வியாம் முல்டர், லுங்கி ங்கிடி, அன்ரிச் நோர்ட்ஜே, டுவெய்ன் பிரெடோரியஸ், ககிசோ ரபாடா, டப்ரைஸ் ஷம்சி, ராஸி வான் டெர் டுசென் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மொஹமதுல்லா தலைமையிலான பங்களாதேஷ் அணியில், நயிம் ஷேக், சௌம்யா சர்கார், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹிம், அஃபிஃப் ஹூசைன், நூருல் ஹசன் சோஹன், ஷேக் மெஹதி ஹசன், நசும் அகமது, முஸ்டாஃபிஸுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், டஸ்கின் அகமது, முகமது சைஃபுதின், ஷமிம் பட்வாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கிய்ரன் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியில், சிம்ரொன் ஹெட்மையர், ஹேய்டன் வோல்ஷ் ஜூனியர், நிகோலஸ் பூரன், எவின் லூயிஸ், ஃபேபியன் ஆலன், ஒபெட் மெக்காய், டுவைன் பிராவோ, ரவி ராம் போல், ரோஸ்டன் சேஸ், ஆந்ரே ரஸ்ஸல், ஆண்ட்ரே ஃபிளெட்சர், லெண்டில் சிம்மன்ஸ், கிறிஸ் கெய்ல், ஒஷான் தாமஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ரி-20 உலகக்கிண்ண தொடர், எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர் 14ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.