வாகனங்கள் வெளிப்புரத்தில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்கள் புகைப்படங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது, வாகனங்கள் வெளிப்புரத்தில் ஒட்டப்பட்ட புகைப்படங்களை அகற்ற வேண்டும்.
இந்த விடயம் தொடர்பாக வாகன உரிமையாளர்களுக்கு பொலிஸார், போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.
வாகனத்தை பொலிஸ் சோதனை செய்யக்கூடாது என்ற நோக்கத்தில் புகைப்படம் ஒட்டுகிறார்கள்.
மேலும் அரசியல் கட்சியினர், தேர்தல் நேரத்தில் மாத்திரம் கட்சி கொடிகளையும் தலைவர்களின் புகைப்படங்களையும் பயன்படுத்தலாம்.
அதாவது, வாகனங்களின் வெளிப்புறங்களில் புகைப்படங்களை பயன்படுத்த சட்டத்தில் இடமில்லை.
வாகன உரிமம் புதுப்பித்தல், முகப்பு விளக்கு முறையாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதுடன், விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
குறித்த உத்தரவுகளை 60 நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.