எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட் தேர்வு தமிழ்நாட்டில் முதன்முதலில் நடத்தப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு கோரும் சட்டமூலம் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், குடியுரிமை திருத்தச் சட்டம், மற்றும் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க நீட் தேர்வுக்கு விலக்கு தர வேண்டுமென அதிமுக அரசு பா.ஜ.கவிற்கு நிபந்தனை விதித்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.