நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 71 ஆயிரத்து 467 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 773 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறியமை தொடர்பாக கடந்த 24 மணிநேரத்தில் 124 வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.















