திருகோணமலையில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட நிலையில் சிறுவர் இல்லத்தில் வசித்து வந்த 11 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குறித்த குழந்தை, கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் அங்குள்ள வைத்தியசாலை ஊழியர்களினால் அக்குழந்தைக்கு காதுக்குத்து நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்டுள்ளது.
குறித்த குழந்தை கந்தளாய் ஆதார வைத்தியசாலை கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், வைத்தியசாலை ஊளியர்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த செயற்பாட்டை பலரும் பாராட்டியுள்ளனர்.