ஆன்ட்ரிம் மற்றும் டைரோன் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, 440,000 பவுண்டுகள் பெறுமதியான போதைப்பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வடக்கு அயர்லாந்தின் பொலிஸ் சேவையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு, பெல்ஃபாஸ்ட், காஸ்ட்கால்ஃபீல்ட் மற்றும் ஆக்னாக்லோய் ஆகிய இடங்களில் நேற்று (வெள்ளிக்கிழமை) சோதனை நடத்தியது.
இதன்போது ‘பி’ தர போதைப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றினர். மேலும், சோதனையின் போது பணம் மற்றும் கைத்தொலைப்பேசிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் குற்றத்தில் சந்தேகத்தின் பேரில் 33 மற்றும் 44 வயதுடைய இரண்டு ஆண்கள் மற்றும் 40 வயதுடைய ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.



















