உபரியாக உள்ள கொரோனா தடுப்பூசிகளை அடுத்த மாதம் முதல் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி உபரியாக உள்ள தடுப்பூசிகள் ஏழை மற்றும் நடுத்தர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 30 கோடி தடுப்பூசிகளை கூடுதலாக உற்பத்தி செய்யவுள்ளதாகவும், பயாலஜிகல் உள்ளிட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இதற்கான உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை காரணமாக இந்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.