நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.
இந்தவார நாடாளுமன்றக் கூட்டத்தொடரினை இரண்டு நாட்களுக்கு மாத்திரம் நடத்துவதற்கு அண்மையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய, இன்றும் நாளையும் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
அதனடிப்படையில், கட்டளைகள் மற்றும் விதிமுறைகள் பலவற்றை முன்வைப்பதற்காக நாடாளுமன்ற அமர்வு இன்று கூடவுள்ளது.
அதன்படி, முற்பகல் 10.00 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பல திருத்தச் சட்டங்கள் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளன.
அதேநேரம், நுகர்வோர் அதிகார சபை திருத்தச் சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளைய தினம் நாடாளுமன்றில் இடம்பெறும் என சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.