பருவநிலை மாற்றம், தடுப்பூசி விநியோகம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஐ.நா பொதுசபையில் விவாதிக்குமாறு வலியுறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ஐ.நாவுக்கான இந்திய தூதுர் டி.எஸ் திருமூர்த்தி தெரிவிக்கையில், இந்தியாவுக்கு தற்போதைய ஐ.நா பொதுச் சபை கூட்டம் பல வகையில் முக்கியமானது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக உள்ள இந்தியா, வளரும் நாடுகளின் பல்வேறு பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதில் முதலிடம் வகிக்கிறது.
எனவே இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு உலக நாடுகள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைக்கச் செய்வது, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இந்தியா வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களின் சுயாதிகாரம், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் அமைதி உலக நாடுகளின் பொருளாதார மீட்சி, ஸ்திரமான வளர்ச்சிக்கான இலக்கு ஆகியவை குறித்தும் விவாதிக்கும்படி இந்தியா வலியுறுத்தும்’ எனத் தெரிவித்துள்ளார்.