யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து மக்கள் அச்சம் கொள்ளக் கூடிய ஒரு சூழல் தொடர்வதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதாவது ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று இடங்களில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு, சிறைக்குள் அனுப்படுகின்றவர்கள். ஆனால் மிகவும் விரைவாக விடுதலைப் பெற்று வெளியே வருகின்றனர்.
அவ்வாறு வருகை தருகின்றவர்கள் மீண்டும் அதனையே செய்கின்றனர். மேலும் அவர்களுக்கு சில அதிகாரிகள் துணையாக இருக்கின்றமையினாலேயே வன்முறை செயற்பாடுகளை துணிவாக செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே வடக்கு மாகாணத்தில் கடமையாற்றுகின்ற பொலிஸ் அதிகாரிகள் சட்ட ஒழுங்கை காப்பாற்றுவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
அப்போதுதான் மக்கள் அச்சமின்றி வாழ கூடிய சூழ்நிலை ஏற்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.