வேல்ஸ் ஆம்புலன்ஸ் (மருத்துவ அவசர ஊர்தி) சேவைக்கு உதவ இராணுவத்தினர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.
கொவிட் தொற்றுகளிலிருந்து அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொள்வதால் இந்த ஆதரவு கோரப்பட்டுள்ளது.
இது ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் சில பகுதிகளில் இதேபோன்ற உதவிகளை இராணுவம் முன்னெடுத்து வருகின்றது.
முன்னறிவிக்கப்பட்ட கடினமான குளிர்காலத்திற்கு முன்னதாகவே இந்த கோரிக்கை அவர்களுக்கு தொடக்கத்தை அளிக்கும் என்று சேவையின் தலைமை நிர்வாகி கூறுகிறார்.
வேல்ஸின் தேசிய சுகாதார சேவை வளர்ந்து வரும் அழுத்தத்தில் உள்ளது. தீவிர சிகிச்சை சேர்க்கை அதிகரிப்புடன் போராடுவதாக கூறப்படுகிறது.
முன்னதாக செப்டம்பரில் ஒரு ரக்பி வீரர் ஆறு மணிநேர ஆம்புலன்ஸ் காத்திருப்பை எதிர்கொண்டார்.
கொவிட் குளிர்கால அலையின் போது ஆம்புலன்ஸை ஓட்ட இராணுவம் கடைசியாக உதவியது. தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கார்டிஃபில் ஒரு தற்காலிக மருத்துவமனை கட்டுவதற்கும் உதவியது.