கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கான முடிவு குறித்து மகாநாயக்க தேரர்களிடம் முறையிடுவதற்கு எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது.
அதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் இன்று (திங்கட்கிழமை) அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடத்திற்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் முதலீடுகளை கொண்டு வருவதாக கூறி மதிப்புமிக்க சொத்துக்களை விற்பனை செய்கிறது என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.