நாட்டின் மருத்துவத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு புதிய நலவாழ்வுக் கொள்கையை உருவாக்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் 4 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைக் கட்டுவதற்குப் பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டி வைத்து உரையாற்றினார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம் மருத்துவ சேவைகளை நாடு முழுவதும் கொண்டு செல்ல உதவும் எனவும் கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் இணையம் மூலம் நல்ல மருத்துவமனைகள், ஆய்வகங்கள், மருந்தகங்களை அறிந்துகொள்ள முடிவதுடன், நோயாளிகளின் மருத்துவ ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.