இலங்கையில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 99.5% பேர் முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் 20 முதல் 29 வரையிலான மக்கள் தொகையில் 12.7% பேர் மாத்திரமே தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், 30 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 100% பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் பெற்றுள்ளனர். அதேநேரத்தில் 20 முதல் 29 வயதுக்குட்பட்ட 46% மக்களுக்கு ஒரு டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் 53% பேருக்கு இரண்டு டோஸ்களும் வழங்கப்படுகிறது என அவர் உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்கு இளைஞர்களிடம் கடுமையான தயக்கம் காணப்படுகின்றமையை அவதானிக்க கூடியதாக இருந்ததாக சுகாதார டிஜி கூறினார்.
புராண நம்பிக்கைகளால் ஏமாற்றப்படாமல், தடுப்பூசியைப் பெற இளைஞர்களை நாங்கள் தீவிரமாக வலியுறுத்துகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.