எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் சர்வதேச நாடுகளுக்கான தனது எல்லை கட்டுப்பாடுகளை அவுஸ்ரேலியா தளர்த்தவுள்ளது.
இதற்கமைய, 18 மாதங்களுக்கு பின்னர் முதல் முறையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கவுள்ளது.
நியூ சவுத்வேல்ஸ் தொடங்கி, 80 சதவீத தடுப்பூசி வீதத்தை எட்டிய மாநிலங்களுக்கு அடுத்த மாதம் முதல் சர்வதேச எல்லை மீண்டும் திறக்கப்படும் என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘அவுஸ்ரேலியர்களுக்கு அவர்களின் வாழ்க்கையை திரும்பக் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாங்கள் அதற்கு தயாராகி வருகிறோம். அவுஸ்ரேலியா விரைவில் புறப்படத் தயாராகும்’ என கூறினார்.
தற்போது, அரசாங்கம் டிசம்பர் 17ஆம் திகதி வரை எல்லைத் தடையை விதித்துள்ளது. புதிய முடிவு குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன்பே கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று அர்த்தம்.
சிட்னி மார்னிங் ஹெரால்ட் படி, 210,679 அவுஸ்ரேலியர்கள் வெளிநாடுகளுக்கு பறக்க உட்துறை அமைச்சகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டனர், அதே நேரத்தில் 122,131 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
தற்போது குடிமக்கள் மற்றும் விலக்கு உள்ளவர்கள் மட்டுமே அவுஸ்ரேலியாவுக்குள் நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.