அரச சேவைகளை வழமை போல முன்னெடுப்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையுடன் நீக்கப்பட்டது.
இதனையடுத்து, அரச சேவைகளை வழமைபோல முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே, இதற்கான சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய,
- அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான ஆளணியினரை அடையாளம் கண்டு, கடமைக்கு அழைக்கப்பட வேண்டும்
- அவ்வாறு ஊழியர்களைச் சேவைக்கு அழைக்கும் அதிகாரம் நிறுவன பிரதானிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- உத்தியோகப்பூர்வ வாகனங்களைக் கொண்டுள்ளவர்கள் மற்றும் நிறுவனத்தால் வழங்கப்படும் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு மேற்படி நியதி பொருந்தாது
- அவர்கள் வழமை போலக் கடமைக்குச் சமுகமளிக்க முடியும்
- இவ்வாறு கடமைகளுக்கு அழைக்கப்படும் அதிகாரிகளைத் தவிர்ந்த மற்றைய அனைவரும் ஒன்லைன் முறைமை ஊடாகக் கடமையாற்ற வேண்டும்
- கடமைகளுக்காக அலுவலகத்துக்கு அழைக்கப்படும் ஊழியர்கள் பணியல்லா நாட்களில் ஒன்லைன் முறைமை ஊடாகக் கடமையாற்ற வேண்டும்
- இவ்வாறு கடமைக்கு அழைக்கப்படும் அதிகாரிகள் மற்றும் ஒன்லைன் முறைமை ஊடாகக் கடமையாற்றும் ஊழியர்களுக்கான வசதிகள் வழங்குதல் மற்றும் அவசியமான சந்தர்ப்பங்களின்போது வேறு இடங்களில் கடமையாற்ற தற்காலிகமாக வாய்ப்பளிக்கும் அதிகாரம் அமைச்சின் செயலாளர் மற்றும் நிறுவன பிரதானிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், விசேட நோய் நிலைமைகளைக் கொண்டவர்களைக் கடமைக்கு அழைக்க வேண்டாம்
- அவ்வாறானவர்களின் சேவை கட்டாயம் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் அவர்கள் கடமைக்குச் சமுகமளிக்கவும்
- வீடு செல்லவும் விசேட கால எல்லை மற்றும் வசதிகளை வழங்க நிறுவனத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.