போருக்குப் பின்னரான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக இலங்கை உறுதியளித்தது.
இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள், அமைதி மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான அனைத்து பிரச்சினைகளிலும் உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கு இலங்கை உறுதிபூண்டுள்ளதாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமீபத்தில் தெரிவித்ததாக அவர் இதன்போது தெரிவித்தார்.
இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த முயற்சியில், ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட சர்வதேச கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.