சீனாவுடனான இராணுவ பதற்றம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான நிலையில் உள்ளதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
அதிக எண்ணைக்கையிலான சீனாவின் விமானம் தாய்வானின் எல்லைக்குள் நுழைந்தமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனநாயக நாடான தாய்வானை தனது சொந்த பிரதேசம் என சீனா கூறிவருவதனால் தைபே மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
மேலும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நான்கு நாட்களாக, தாய்வான் வான் பரப்பில் சுமார் 150 சீன விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக அறிவித்தது.
சீனா ஏற்கனவே தாய்வானை ஆக்கிரமிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்றும் அது 2025 க்குள் முழு அளவில் படையெடுப்பை நடத்தும் என்றும் தாய்வான் பாதுகாப்பு அமைச்சர் சியு குவோ-செங் கூறியுள்ளார்.