சீனாவின் அழுத்தத்திற்கு ஒருபோதும் தாய்வான் அடிபணியாது என்றும் தீவில் பதற்றம் நீடிப்பதால் ஜனநாயக வாழ்க்கை முறையை பாதுகாப்போம் என்றும் ஜனாதிபதி சாய் இங்-வென் தெரிவித்துள்ளார்.
தாய்வானின் தேசிய தினத்தைக் குறிக்கும் வகையில் உரையாற்றிய அவர், சாதிக்கும் அளவிற்கு பெரிய அழுத்தத்தை சீனாவில் இருந்து தாய்வான் எதிர்கொள்வதாக கூறினார்.
தன்னை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக கருதும் தாய்வானை தனது சொந்த நிலப்பரப்பு என சீனா தெரிவித்து உரிமை கொண்டாடி வருகின்றது.
தனது பிராந்தியங்களுள் ஒன்றான தாய்வானை தேவைப்பட்டால் அனைத்து சக்தியையும் பயன்படுத்தி அதை கைப்பற்றுவதாகவும் சபதம் செய்துள்ளது.
இதனை தொடர்ந்து தாய்வான் வான்பரப்பில் சீனா இராணுவ விமானங்களை அதிக எண்ணிக்கையில் அனுப்பியுள்ளது.
ஊடுருவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, தாய்வானில் உள்ள 23 மில்லியன் மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.