ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகளை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ரஷ்யாவின் மற்றுமொரு தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகளை ஐதராபாதை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பையோபார்மா லிமிடெட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரு டோசாக மட்டுமே செலுத்தப்பட வேண்டிய இந்த தடுப்பூசிக்கு இன்னும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், குறித்த தடுப்பூசிகள் ஆறு மாத காலத்திற்குள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதால் அதனை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி ஹெட்டெரோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 40 இலட்சம் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.