கோதுமை மாவின் விலையும் சீமெந்தின் விலையும் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 50 கிலோ சீமெந்து மூடையொன்றின் விலையை 93 ரூபாயினால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இதனையடுத்து, 50 கிலோ சீமெந்து மூடையின் தற்போதைய விலை 1,098 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கோதுமை மா கிலோவொன்றின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் தீர்மானித்துள்ளது.