மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை புறந்தள்ளி செயற்பட்டால், வெற்றிகரமான பயணத்தை ஒருபோதும் மேற்கொள்ள முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
கட்டுபெத்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கமானது இந்த இரண்டு வருட பயணத்தில் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்தே பயணித்துக் கொண்டிருக்கிறது.
இந்தக் காலக்கட்டத்தில் நாம் செய்த தவறுகள் என்ன, குறைப்பாடுகள் என்ன, எந்த இடத்தில் பிழை நேர்ந்தது என்பதை சரியாக ஆராய்ந்து பயணித்தால், அடுத்த மூன்று வருடங்களில் மக்களின் அபிப்பிராயத்தை மீண்டும் எம்மால் பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்கும்.
ஆனால், இந்தப் பயணத்தை நாம் உறுதியாக மேற்கொள்ள வேண்டும். மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் எமது பயணம் அமைந்திருக்க வேண்டும்.
இதனை நாம் தவற விட்டால், ஒருபோதும் எம்மால் எமது பயணத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியாது.
மக்களின் வாழ்வாதாரச் சிக்கலைக் குறைத்து, தேசிய பாதுகாப்பை இன்னமும் பலப்படுத்த வேண்டும் என்பதையே மக்கள் எம்மிடம் எதிர்ப்பார்த்தார்கள்.
இந்த எதிர்ப்பார்ப்பை நாம் விளையாட்டாக கருதக்கூடாது. அதனைப் புறந்தள்ளி செயற்படவும் கூடாது. – என்றார்