ஐ.பி.எல். ரி-20 தொடரின் வெளியேற்றுப் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதன்படி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, நாளை (புதன்கிழமை) நடைபெறும் போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
சார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் றோயல் செலஞ்சலர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொண்டன.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற றோயல் செலஞ்சலர்ஸ் பெங்களூர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, விராட் கோஹ்லி 39 ஓட்டங்களையும் தேவ்தத் படிக்கல் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொல்கத்தா அணியின் பந்துவீச்சில், சுனில் நரேன் 4 விக்கெட்டுகளையும் லொக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 139 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய றோயல் செலஞ்சலர்ஸ் பெங்களூர் அணி 19.4 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுப்மான் கில் 29 ஓட்டங்களையும் வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தலா 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பெங்களூர் அணியின் பந்துவீச்சில், மொஹமட் சிராஜ், ஹர்சல் பட்டேல் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 26 ஓட்டங்களையும் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்திய சுனில் நரேன் தெரிவுசெய்யப்பட்டார்.