லண்டனின் புகழ்பெற்ற ஆற்றங்கரையோர புத்தாண்டு பட்டாசு கண்கவர் நிகழ்வு, இரண்டாவது ஆண்டாகவும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிரித்தானியா கடுமையான முடக்க நிலையில் இருந்தது. ஆனால் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்ட போதிலும், லண்டன் மேயர் சாதிக் கான் மீண்டும் நிகழ்வை இரத்து செய்தார்.
இந்த ஆண்டு நிகழ்வும் ஏன் இரத்து செய்யப்படுகிறது என்பதை விளக்கி, மேயரின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில்,
‘கடந்த ஆண்டு நிகழ்ச்சி தொற்றுநோய் காரணமாக சற்று வித்தியாசமான முறையில் நடந்தது. இந்த ஆண்டு லண்டனில் எங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பல அற்புதமான புதிய விருப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன. எப்போதும்போல, லண்டன், புத்தாண்டை அற்புதமான முறையில் வரவேற்கிறது’ என கூறினார்.
டிராஃபல்கர் சதுக்கத்தில் இன்னும் ஒரு கொண்டாட்டம் இருக்கும், விபரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.
2021ஆம் ஆண்டின் தொடக்க ஒளி நிகழ்ச்சியை, மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் தொலைக்காட்சியில் கண்டு இரசித்தனர்.
பொதுவாக சுமார் 100,000 மக்கள் விக்டோரியா கரையை சுற்றி வீதிகளில் நிரம்பி வழிவார்கள். தேம்ஸ் நதியின் விக்டோரியா கரை மற்றும் தென்கரை பகுதிகளில் கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெறும்.