இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டிகளில், ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ், அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் மற்றும் கேல் மொன்பில்ஸ் ஆகியோர் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ், இத்தாலியின் பெபியோ போக்நினியை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஸ்டெபீனோஸ் 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ்வும், பிரித்தானியாவின் என்டி முர்ரேவும் பலப்பரீட்சை நடத்தினர்.
எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், 6-4, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில், பிரான்ஸின் கேல் மொன்பில்ஸ், தென்னாபிரிக்காவின் கெவீன் பீட்டர்சனுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், கேல் மொன்பில்ஸ், 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.