பொருட்களின் விலை உயர்வு தற்காலிக பிரச்சினை என்றும் அடுத்த சில வாரங்களுக்குள் இந்த நிலைமை மாறும் என நம்புவதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றுக்கான கட்டுப்பாட்டு விலை அண்மையில் அரசாங்கத்தினால் நீக்கப்பட்டிருந்தது.
இந்த நேரத்தில் நேர்மையற்ற வர்த்தகர்கள் நுகர்வோரைச் சுரண்ட முயற்சித்தால் அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கொரோனா தொற்று தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் பொருட்களின் விலை உயர்வை கையிலெடுத்து போராட்டதில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.
அரசாங்கத்தின் முன்னோக்கிய நடவடிக்கைகளை தடுப்பதே எதிர்க்கட்சிகளின் நோக்கம் என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
உலகளவில் பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில் இந்நிலைமை இயல்புக்கு திரும்பும் என்றும் எதிர்காலத்தில் உணவு பொருட்களின் விலை குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.