கிரேக்கத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மொத்தமாக ஆறு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கிரேக்கத்தில் கொவிட் தொற்றிலிருந்து மொத்தமாக ஆறு இலட்சத்து 93ஆயிரத்து 886பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 48ஆவது நாடாக விளங்கும் கிரேக்கத்தில் இதுவரை ஆறு இலட்சத்து 93ஆயிரத்து 886பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15ஆயிரத்து 375பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 689பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 27பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 27ஆயிரத்து 342பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 357பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.