பயங்கரவாதம் போன்ற சவால்களை எதிர்கொள்ள இந்தியா- இஸ்ரேல் ஆகிய நாடுகளிடையே ஒற்றுமை உள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு 5 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள அவர், இந்திய – யூத சமூகத்தினரின் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இந்தியாவிற்கம் , இஸ்ரேலுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக தொப்புள் கொடி உறவு உள்ளது. இந்தியாவும், இஸ்ரேலும் ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மையின் மாண்பை காத்து வருகின்றன.
பண்டைய கலாசார தத்துவங்களில் சிலவற்றை பின்பற்றுவதிலும், இரு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை உள்ளது. இந்தியா வசுதேவ குடும்பகம் என்ற தத்துவத்தை பின்பற்றி உலகம் ஒரே குடும்பம் என்ற கொள்கைப்படி நடக்கிறது.
இஸ்ரேல் டிகுன் ஓலம் என்ற தத்துவப்படி உலக மக்களை சுகப்படுத்தும் கொள்கையை பின்பற்றுகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.