நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு எதிரான திவி நெகும மோசடி குறித்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொண்டமை தொடர்பாக தொழில் நிபுணர்கள் தேசிய முன்னணி சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
குற்றப்பத்திரிகைகள் மீளப்பெற்றுக்கொள்வதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்ட நிலையில் இதேபோன்ற மற்றொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில்சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
எனவே, அவரது அறிவுறுத்தலின் பேரில் திரும்பப் பெறப்பட்ட வழக்கின் எண்ணையும், திரும்பப் பெறுவதில் தாக்கத்தை ஏற்படுத்திய முந்தைய வழக்கு எண்ணையும் வழங்குமாறு சட்டமா அதிபரை தொழில்நிபுணர்கள் தேசிய முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது.
33 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையை சட்ட மா அதிபர் மேலப்பருவதாக நீதிமன்றில் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
இதனை அடுத்து பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் திவினெகும பணிப்பாளர் கித்சிரி ரணவக்க ஆகியோரை விடுதலை செய்தது உத்தரவிடப்பட்டுள்ளது.