மியன்மாரில், கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதற்காகச் கைது செய்யப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
யாங்கூனிலும், மற்ற பகுதிகளிலும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து அவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு விடுதலை செய்யப்பட்டனர்.
மியன்மாரில் விடுமுறை தினம் ஒன்றை முன்னிட்டு, கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என இராணுவத் தலைவர் முன்னர் அறிவித்திருந்தார்.
சுமார் நாலாயிரத்துக்கும் அதிகமானோர் மீதான குற்றச்சாட்டுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆட்சியில் இருந்து இறக்கப்பட்ட முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட முக்கிய அரசியல் கைதிகள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.