வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ், அல்லது கொரோனா பரிசோதனையின் நெகட்டிவ் சான்றிதழில் என இரண்டில் ஒன்றை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான புதிய வழிகாட்டல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியா வரும் பயணிகள் கொரோனா சான்றிதழ்களை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் நடைமுறை வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விதிமுறைகள் வெளிநாடுகளில் இருந்து வருவோரால் கொரோனா உருமாறிய நிலையில் பரவுவதை தடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.