இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுத்திருந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) 100 கோடி என்ற இலக்கை எட்டவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இலக்கினை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் மூவர்ண தேசியக் கொடி பறக்கவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் விரைவில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இந்தியாவில் இதுவரை 99.65 கோடி பேர் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளனர். இவர்களில் 75 வீதமானோர் முதல் தவணை தடுப்பூசியையும், 31 சதவீதமானோர் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறுப்பிடத்தக்கது.