தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகவுள்ளதாகவும், இதனால் ஏழு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவிக்கையில், “தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகவுள்ளது.
இது மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும். இதன்காரணமாக ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்’ எனத் தெரிவித்துள்ளார்.