யாழ்ப்பாணம் – குருநகரில் உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்களால் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த எதிர்ப்பு நடவடிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
உள்ளூர் இழுவை மடி தொழில் தடை செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தமைக்கு எதிர்ப்பு வெளியிடும் வண்ணமே குருநகர், வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, குருநகர் பகுதியில் கறுப்புக் கொடிகளை கட்டி ஹர்த்தாலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக குருநகர் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவ பொம்மையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.