பயங்கரவாத தடைச்ச சத்தத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் விளக்கமறியலில் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 9 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகசந்திப்பொன்றில் கலந்துகொண்டு ஷரீஆ சட்டம் குறித்து சர்ச்சையான கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த கருத்து இன முரணப்பாட்டை ஏற்படுத்துவதாக தெரிவித்து மார்ச் 16 ஆம் திகதி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரை மீண்டும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.