டிசம்பர் மாதமளவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து மக்கள் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்டு வருவதாக குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
மக்கள் சகாதார நடைமுறைகளை மீறி சுற்றலாக்கள் சென்றுள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் எதிர்வரும் இரு வாரங்களில் மேலும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.