ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி போப்பாண்டவர் பிரான்சிஸை இந்தியாவுக்கு வர அழைப்பு விடுத்துள்ளார்.
ஜி 20 உச்சி மாநாடு இன்றும் நாளையும் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா உட்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி, கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்பு குறித்து உரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டில் 20 உலக நாடுகளின் தலைவர்கள், கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பருவ நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட விடங்களை விவாதிக்கின்றன.
இந்நிலையில் போப்பாண்டவர் பிரான்சிஸை பிரதமர் மோடி நேரில் சந்தித்து உரையாடினார்.
இது குறித்து அவர் டிவிட்டரில், “போப் பிரான்சிஸிடுடனான சந்திப்பு சிறப்பாக இருந்ததாகவும், சர்தேச விடயங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு அமைந்ததாகவும், அவரை இந்தியாவுக்கு வர அழைப்பு விடுத்துள்ளேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.