ஜம்மு-கஷ்மீரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆரம்பித்துள்ள திட்டங்கள், பிரதமர் நரேந்திர மோடியின் வளமான ஜம்மு-காஷ்மீர் திட்டத்தை நனவாக்குவதற்கானவை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகியவற்றை வட இந்தியாவில் உயர்கல்வி மையமாக உருவாக்க மத்திய அரசு செயற்பட்டு வருகிறது.
ஐஐடி ஜம்முவின் நிரந்தர வளாகம், பிராந்திய பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாப்பதிலும், அளவிடக்கூடிய தீர்வுகளை ஊக்குவிப்பதிலும் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
ஐஐடி ஜம்மு தேசிய கல்விக் கொள்கைக்கு இணங்க ஸ்தாபிக்கப்பட்டது என்பதோடு, மனிதநேயம் மிக்க எதிர்கால சமுதாயத்தினை உருவாக்குவதை இலக்காக கொண்டது என்றும் அவர் கூறினார்.
ஐஐடி ஜம்முவானது, ஐஐஎம் ஜம்முவுடன் இணைந்து கூட்டுப் பட்டப்படிப்புகளை ஆரம்பிக்கவுள்ளதாகவம் அவை, உள்நாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பொறியியல் துறை, சமூக நலனுக்கான தீர்வு, ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல், உள்ளிட்ட முன்னோடி கற்கைகளை உள்ளீர்த்தவையாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், ஐஐடி ஜம்மு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகும் என்பதோடு உயர்கல்வி ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சியில்புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்று அமைச்சர் பிரதான் நம்பிக்கை வெளிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு தனது மூன்று நாள் பயணத்தின் போது ஐஐடி ஜம்மு வளாகத்தின் மூன்று கட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.