ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இடம்பெறவுள்ளது.
காலநிலை மாற்றங்களும், அதற்கு முகங்கொடுத்துச் செயற்படுவதற்காக நாடுகள் திட்டமிடும் வழிமுறைகள் தொடர்பாக இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது.
அத்துடன், குறித்த மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதேவேளை, நாளை மற்றும் நாளை மறுதினங்கள் உலகத் தலைவர்களின் மாநாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில், 197 நாடுகளின் அரச தலைவர்கள், அரச பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.