இலங்கையில் மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளன.
இதனையடுத்து, மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய ஆயிரத்து 600 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, முன்னர் போன்று வழமையான நேரங்களுக்கு அமைய நாளை முதல் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
எவ்வாறாயினும் நாளை முதல் அலுவலக ரயில் சேவைகள் மாத்திரமே சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக தஸநாயக்க அறிவித்துள்ளார்.
பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்கும் போது சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றுமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.