பருவநிலை மாற்றத்தால் இந்தியாவை போன்று வளர்ந்து வரும் நாடுகளில் விவசாயம் பெரும் பாதிப்பை சந்தித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், பருவநிலை பாதிப்பை எப்படி குறைப்பது என்பதில் உலக நாடுகள் அக்கறை காட்டுகின்றன. அதேநேரத்தில் இயற்கையோடு இணைந்து வாழ்வதற்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை.
இது பருவநிலை மாறுபாட்டால் கடுமையாக பாதிக்கப்படும் வளர்ந்து நாடுகளுக்கு செய்யப்படும் அநீதி. நம் வளர்ச்சி கொள்கைகள் மற்றம் திட்டங்கள், இயற்கையுடன் இணைந்து வாழ்வதை சார்ந்ததாக இருக்க வேண்டும்.
இந்தியாவைப் போலவே பெரும்பாலான வளர்ந்து வரும் நாடுகளில் பருவநிலை மாறுபாட்டில் விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.