இந்தியாவிலிருந்து மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரங்கள் இன்று (02) நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளது.
அத்துடன், குறித்த பசளை தொகுதி 4 விமானங்களினூடாக கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
31 இலட்சம் லீற்றர் திரவ உரத்தை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்ட நிலையில் அதன் முதல் தொகுதியாக 100,000 லீற்றர் உரம் அண்மையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இலங்கையில் இரசாயன உரத்துக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, சீனாவிலிருந்து சேதனப்பசளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
எனினும் சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட உர மாதிரிகளில் அபாயகரமான பக்டீரியாக்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த இறக்குமதி முயற்சி கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.