மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ள அவலநிலையை எதிர்காலத்தில் அமையும் தனது அரசாங்கத்தின் கீழ் மீளவும் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்தார்.
விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் உலகில் எந்த நாடும் 100 சதவீதம் இயற்கை விவசாயத்தை பின்பற்றவில்லை என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக அவுஸ்ரேலியாவில் கூட, 50 சதவீத விவசாயமே இயற்கை முறையிலான விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.