நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மழையுடன் கூடிய வானிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் ஷிரந்தி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் 30 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாகவும் அதிலும் மேல் மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் 68 வீதமாகமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், பதுளைஎ இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.