டெல்டா மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது.
இதுதவிர தென் தமிழகத்தை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்.
டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.